பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Thursday, December 24, 2009

  'வால்'துக்கள் .....! 






என் நிறத்தைப் 
போல்.....
உங்கள் மனதும்....

என் முனைகள் 
போல்.....
உங்கள் பார்வையும்...

என் இருப்பிடம்
போல்....
உங்கள் மனதும்...

என் தோற்றம் 
போல்....
உங்கள் வாழ்க்கையும்.....

இந்த கிருஸ்துமஸ் முதல்....
சிறக்கவும் 
சீர் பெறவும் 
மனதார வாழ்த்துக்கள்..................!

                                                ------- நட்சத்திரம் !

Tuesday, December 22, 2009

'தன்'னிறைவு 



ஓட்டை விழுந்த 
ஓட்டினிலே.....

வெள்ளியை
உருக்கிக் காய்ச்சிய 
ஓடையாய்
ஒழுகிய மழைத் துளி.....

மின்னியது;
ஏழையின் கண்ணுக்கு.....
மலை இல்லா
குற்றாலமாய்......!

------------------------------------------- தாமரையான் 
காதல் திருமணம்....!







மீனுக்கும் தூண்டிலுக்கும்
காதல் 
திருமணம்....!
மீனின் பெற்றோருக்குத் தெரியாமல்.....!


திருமணம் ஆன
மகிழ்ச்சியில்...
பிறந்த வீடாம் கடலிலிருந்து 
புகுந்த வீடாம் கரைக்கு 
வந்தால்...
மீனுக்கு அதிர்ச்சி.....!


காரணம்......?
கரையில் தன்னைப் போல் 
பல மீன்கள்.....
வாழாவெட்டியாய்......!


துணையாம் தூண்டிலைக் 
கண்டது மீன்.....
தூண்டில் மீண்டும் 
சென்றது 
கடலுக்கு......
மறுமணம் செய்ய..........!


.............................................தாமரையான் :)

Thursday, November 26, 2009

மாவீரர் தினம்.....!

வணக்கம் தமிழர்களே.......
மீண்டும் ஒரு சுவாரசியத் தகவலுடன் நான் உங்கள் முன்......!
நவம்பர் 27 .....
அனைத்து ஈழத் தமிழர்களுமே கொண்டாடும் நாள்......
அதுதான் மாவீரர் தினம்.....!






ஈழப் போரில் உயிர் நீத்த ஒவ்வொரு தியாகச் சுடருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.


ஒவ்வொரு மாவீரர் தினத்தன்றும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் மக்களுடன் உரையாடுவார். அவர் 
இறந்துவிட்டார் என்று இலங்கை அரசு கூறியது உண்மையா இல்லையா என தெரிந்து கொள்ள அனைத்து மக்கள் இனமே காத்திருப்பது நாளைய 
நாளுக்காகத்தான். .......!


நாளை திரு.பிரபாகரன் திரையில் தோன்றி மக்களுடன் உரையாடுவாரா, இல்லையா என்பதே தற்பொழுது பெருகிவரும் பரபரப்பு.........!
காலத்தின் கைகள் நம்மையும் பொறுத்திருந்து பார்க்க ஜாடை செய்கிறது.... :-)


எதுவாயினும் தங்கள் இன மக்களுக்காக,நாட்டுக்காக ஜாதி மதம் கடந்து போர்க்களத்தில் உயிர் நீத்த ஒவ்வொரு தேசப்பற்று கொண்ட தியாக உள்ளத்துக்கும் இந்த தமிழனின் மனப்பூர்வமான நன்றிகள் கண்ணீருடன்.........!




இவர்கள் அனைவரின் உயிரிழப்புக்கும் காலம் சொல்லட்டும் பதில்.........!


கண்ணீருடன்



தாமரையான் :-((

Tuesday, November 24, 2009




புலியின் பிறந்த நாள்.........!


உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் "தமிழ் உணர்வு ரத்தத்தில் கலந்த'' தமிழர்களுக்கு எமது வணக்கங்கள்.......!




நவம்பர் 26.....!


ஒவ்வொரு தமிழனுக்கும் நினைவுபடுத்ப்பட வேண்டிய நாள். 
ஆம்.....திரு.வேலு பிரபாகரனின் பிறந்த நாள்.







வல்வெட்டித்துறையில் திருவேங்கடம்  வேலுப்பிள்ளை , வல்லிபுரம்  பார்வதி ஆகியோருக்கு மகனாய்ப் பிறந்தார். இலங்கைத் தமிழர்களை அந்நாட்டு சட்டம் படுத்தும் பாடு அவரை பொங்கி எழச் செய்தது. அதன் விளைவுகளே பின்னர் நடந்த  அனைத்தும்  விதியின் விளையாட்டுக்கள் என்றால் அது மிகை ஆகாது. சிறு வயதிலேயே TIP என்னும் மாணவர் படையில் சேர்ந்தார்.





1972-ம் ஆண்டு அவர் முயற்சியில் உதயமானது "விடுதலைப் புலிகள்" இயக்கம்.பின் அதில் உள்ள நாட்டமும், பற்றும், வெறியும் அதிகரிக்க 1975 -ல் தமிழ் ராணுவப் படை கொண்டு யாழ்ப்பான ஆளுநர்  Alfred dhuraiyapaah வை முதல் அரசியல் கொலை செய்தார். 


மே மாதம் 1991,1992 -ல் இந்திரா காந்தி கொலை வழக்கில் முதல் முறையாக கைது செய்ய உத்தரவிட்டது. பின்னர் அடுக்கடுக்காக பல பிரச்சனைகள் அவரைப் பின் தொடர்ந்தாலும் அவரின் போராட்ட வாழ்க்கையின் அனுபவங்களும், அணுகுமுறையும் அவரை பல சிக்கல்களைத்  தாண்டி வரச்செய்தன.


பின் காலங்கள் செல்ல செல்ல, அவர் ஒரு சிறந்த போராளியாக வெளிப்பட்டார். ஆண்டன் பாலசிங்கம்,பொட்டு அம்மன் போன்றோர் இவர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் என்பது அனைவரும் அறிந்ததே.





பின்னர் இலங்கை ராணுவ இன்னல்களாலும், சில நாடுகளின்  ரகசிய உதவியாலும் பிரபாகரனின் இயக்கத்திற்கு கஷ்ட காலம் நேரிட்டது. 


கடந்த மே 19,2009 அன்று தலையில் குண்டடியுடன் அவர் உடல் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது . அது அவர் அல்ல என்றும், அவர் தான் என்றும் பல சர்ச்சைகள் இன்றுவரை தொடர்கின்றன


'அவர் உடல்' எனவும் ஒரு உடல் காட்டப்பட்டது.மக்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்களில் இருந்தனர் என்பது அனைவரும்  அறிந்ததே.





அவர் பிறந்தநாளான தேதியில்(26.11.2009) அவர் 'இறந்திருக்கும் பட்சத்தில்' அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். 


வாழ்க தமிழ் உணர்வு ...!
வளர்க தமிழ் பற்று ...!



இவண்
தாமரையான். :-))

Monday, November 23, 2009





 துன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் !







நீ செய்த தவறுகளை வாழ்த்து , அந்தத் தவறுகள் நீ அறியாமலே 


உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன 


துன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் 
இன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் 


உன் நிலை எப்படிப் பட்டதாக இருந்தாலும், அதைக் குறித்து 
நீ கவலைப் பட வேண்டாம் ,இலட்சியத்தைப் பற்றிக் கொண்டு 
முன்னேறியபடியே இரு!


மற்றவர்களுக்கு நல்லது செய்வது தான் புண்ணிய புண்ணிய
மாகும் . மற்றவர்களுக்கு தீங்கு செய்வது பாவமாகும். மனிதன் 
எந்த அளவுக்கு உயர்கிரானோ அந்த அளவுக்கு தக்கபடி, அவன் 
கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும் .


கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான 
காரியம் எதையும் சாதித்து விட முடியாது. இது என் உறுதியான
நம்பிக்கை.


யார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும் மரியாதையும் 
போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் 
அவமானத்தையே அடைகிறான் .


```````சுவாமி விவேகானந்தர்`````````````

Tuesday, October 20, 2009


சுவாமி விவேகானந்தர் சொற்க்கள் .....!




நான் கடவுளிடம் சக்தி கேட்டபொழுது ....!
அவர் தந்தது கடினமான தருணங்களை (நேர்கொள்ள).............!

When I Asked God for Strength
He Gave Me Difficult Situations to Face

நான் கடவுளிடம் அறிவும் வலிமையும் கேட்டபொழுது.....!
அவர் தந்தது வாழ்க்கையின் புதிர்களை (தீர்வு காண)......!

When I Asked God for Brain & Brown
He Gave Me Puzzles in life to Solve

நான் கடவுளிடம் மகிழ்ச்சியைக் கேட்டபொழுது
அவர் காட்டியது சில சோகமான மனிதர்களை.....!

When I Asked God for Happiness
He Showed Me Some Unhappy People

நான் கடவுளிடம் செல்வம் கேட்டபொழுது
அவர் காட்டியது எப்படி உழைப்பதென்று........!

When I Asked God for Wealth
He Showed Me How to Work Hard

நான் கடவுளிடம் கருணையைக் கேட்டபொழுது
அவர் கொடுத்தது உழைப்பதற்கு ஓர் வாய்ப்பு.....!

When I Asked God for Favors
He Showed Me opportunities to Work Hard

நான் கடவுளிடம் அமைதியை கேட்டபொழுது
அவர் காட்டியது எப்படி பிறருக்கு உதவுவதென்று...............!

When I Asked God for Peace
He Showed Me How to Help Others

மொத்தத்தில்
நான் கேட்டது எதுவுமே அவர் தரவில்லை.....!

நாஅவர் கொடுத்தது அனைத்துமே எனக்கு வேண்டியது......!

God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed

-சுவாமி விவேகானந்தர்

Saturday, October 17, 2009

"நீருக்குள் மூழ்கிடும் தாமரை "

ஒவ்வொரு வரியிலும் தமிழ் பெருக்கெடுக்கும், காதல் சொட்டும், பாசம் வழியும் இந்த காதல் ஓவியத்தை தீட்டிய எங்கள் தாமரைக்கு கோடான கோடி நன்றிகள்..........!

(பெண்ணே நீ காஞ்சனை )


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓ சாந்தி சாந்தி
ஓ சாந்தி
என் உயிரை உயிரை
நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய்
எனை தாண்டி
இனி நீதான் எந்தன்
அந்தாதி

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ஏதோ ஒன்று
என்னை ஈர்க்க
மூக்கின் நுனி
மர்மம் சேர்க்க
கள்ளத்தனம்
ஏதும் இல்லா
புன்னகையோ
போகன்வில்லா

நீ நின்ற இடம் என்றால்
விலை ஏறி போகாதோ

நீ செல்லும் வழி எல்லாம்
பனி கட்டி ஆகா
தோ

என்னோடு வா
வீடு வரைக்கும்
என் வீட்டை பார்
என்னை பிடிக்கும்


இவள் யாரோ யாரோ
தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே
போகாதே

இது பொய்யோ மெய்யோ
தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே
போகாதே
(போகாதே )


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
ஓ ஓ

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

தூக்கங்களை
தூக்கி சென்றாய்
(தூக்கி சென்றாய் )
ஏக்கங்களை
தூவி சென்றாய்

உன்னை தாண்டி
போகும் பொது
(போகும் பொது )
வீசும் காற்றின்
வீச்சு வேறு

நில் என்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

காதல் எனை கேட்டகவில்லை
கேட்டால் அது காதல் இல்லை


என் ஜீவன் ஜீவன்
நீ தானே
என தோன்றும் நேரம்
இது தானே

நீ இல்லை இல்லை
என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம்
தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓ சாந்தி சாந்தி
ஓ சாந்தி
என் உயிரை உயிரை
நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய்
எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி........!

- தாமரையான்



Sunday, September 27, 2009

அனைவருக்கும் கவலை கலந்த வணக்கம்..........!




இந்த உலகத்தில் பல மனிதர்கள் தங்களின் நல உள்ளதாலும், பொது நல மனதாலும், கடின உழைப்பாலும் , தான் இறந்தாலும் மக்களின் உள்ளத்தில் நீங்க இடம் பெற்று சிறந்து வாழ்கிறார்கள்.
அத்தகைய மகான்களில் ஒருவர் தான் நம் கருப்பு காந்தி திரு.காமராஜர். அவரின் பொது நல வாழ்க்கை சுயநலமற்றது.அதோடு பாராட்டத்தக்கது. அந்த உத்தமரின் பெயரையும்,நிழல் படத்தையும், சில மக்கள் (மாக்கள்) தவறாக உபயோகிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு சுவரொட்டியை நான் பார்த்தேன். ஒரு ஜாதி மாநாட்டிற்கு கர்ம வீரரின் நிழல்படம் கொண்டு விளம்பரப் படுத்தப்படுள்ளது. இது ஒரு தவறான அணுகுமுறை. ஒருவரின் உழைப்பையும்,பெருமையையும் இவ்வாறு தவறான நோக்கத்தில் மக்கள் மனதில் விதைப்பது வேதனைக்குரியது.
இனிவரும் நம் காலத்திலாவது ஜாதி,மதம் ஒழியும் என்ற நம்பிக்கையில்

தாமரையான்

Thursday, September 24, 2009

மறுமுறை ஒரு முறை பார்ப்போமா ?

தமிழர்களுக்கு வணக்கம்.....!
ஈழத்தில் வாழ்ந்தும் , வாழ்ந்துகொண்டு இருக்கும் என் ஒவ்வொரு தமிழ் இதயத்துக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்......!
பாடல் உடல் (வரிகள்) - கவிப்பேரரசு
பாடல் உயிர் (இசை) - ரகுமான் . அ . ர
பாடல் இதயம் (உருவாக்கம்)-கோபால ரத்னம் சுப்ரமணியம்

கண்களில் பெருகும் கண்ணீர் இதயத்தில் உரசும் வலிகள்.....! இதற்க்கெல்லாம் காலம் சொல்லட்டும் பதில்..........!






விடை கொடு எங்கள் நாடே ..........!
கடல் வாசல் தெளிக்கும் .........!
பனை மரக் காடே , பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா ?

உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் (விடை கொடு ...)
கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா ? வருமா ? (2) சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா ? வருமா ?

கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே ? (2)



பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிரோம் மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம்
(விடை கொடு ...)

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைதொம்(2) எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைத்தோம் முன் நிலவில் மலரில் கிடந்தோம் ,
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம் வனமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்




தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்

(விடை கொடு ...)

என்றும் தமிழன்
தாமரையான்

Sunday, September 20, 2009

சொல்லடி சிவசக்தி!





நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?

சொல்லடி சிவசக்தி! - எனைச்

சுடர்மிகு மறிவுடன் படைத்தது விட்டாய்,

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி,சிவசக்தி! - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நிதம்

நவமெனச் சுடர்தரும் உயிர்க்கேட்டேன்!

தசையினைத் தீ சுடினும் - சிவா

சக்தியைப் பாடுநல் லகன்கேட்டன்,

அசைவறு மதிகேட்டேன்; - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுள்ளதோ?





- மகாகவி . பாரதி

வணக்கம் தோழர்களே..........!

உலகின்

பல மூலைகளில்
பல முகங்களில்
பல இடங்களில் வசித்தாலும்
நம்மை என்றும் என்றென்றும் ஒன்று சேர்க்கும்
உன்னத விஷயம்.............!






நம் தமிழ்...!


சுவாசிப்போம்.....
நேசிப்போம் ......... நம் தமிழை
நம் உயிர் உள்ள வரை............!




ஏற்கனவே வயது பற்பல கொடிகள்...........!
கி.மு கி.பி. எல்லாம் உன்னுள் அடக்கம்...........!
இருப்பினும்
இன்னும் உன்
ஜீவன் எங்களுள் பெருகுவது
நினைத்து மகிழ்ச்சியே
அன்னையே...........!

வாழ்க நீ என்றென்றும்............!

என்றும் அன்புடன்
தாமரையான்.............!

Thursday, September 17, 2009


காலில் காலில் காலில் நிறமுண்டு!





சகியே சிநேகிதியே ..................... காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!
சகியே
சிநேகிதியே .................... என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு...!

பச்சை நிறமே பச்சை நிறமே...........! இச்சை மூட்டும் பச்சை நிறமே..........
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..... எனக்கு சம்மதம் தருமே...!

பச்சை நிறமே பச்சை நிறமே..........! இலையின் இளமை பச்சை நிறமே..........!
உந்தன் நரம்பும் பச்சை நிறமே...... எனக்கு சம்மதம் தருமே...
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே..........

கிளையில் காணும் கிளியின் மூக்கு......... விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு.........
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா......... பூமி தொடா பிள்ளையின் பாதம்.... எல்லா சிவப்பும் உந்தன் கோபம்...... எல்லா சிவப்பும் உந்தன் கோபம்....!

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்.... அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்...
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள்... கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்.....
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்...
மாலை நிலவின் மரகத மஞ்சள்.... எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்....!


சகியே சிநேகிதியே ..................... காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!
சகியே
சிநேகிதியே .................... என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு...

அலையில்லாத ஆழி வண்ணம்........ முகிலில்லாத வானின் வண்ணம்...
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம்... குவளைப் பூவில் குழைத்த வண்ணம்...
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்....
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்... எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்..

இரவின் நிறமே இரவின் நிறமே......... கார்காலத்தின் மொத்த நிறமே........
காக்கைச் சிறகில் காணும் நிறமே..... பெண்மை எழுதும் கண்மை நிறமே.....
வெயிலில் பாடும் குயிலின் நிறமே....
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே.... எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே!

சகியே சிநேகிதியே ..................... காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!
சகியே
சிநேகிதியே .................... என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு...

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...
மழையில் முளையும் தும்பை நிறமே...
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே... விழியில் பாதி உள்ள நிறமே......
மழையின் முளையும் தும்பை நிறமே... உனது மனசின் நிறமே...
உனது மனசின் நிறமே... உனது மனசின் நிறமே.........!

- கவிப்பேரரசு வைரமுத்து