பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Tuesday, December 22, 2009

'தன்'னிறைவு 



ஓட்டை விழுந்த 
ஓட்டினிலே.....

வெள்ளியை
உருக்கிக் காய்ச்சிய 
ஓடையாய்
ஒழுகிய மழைத் துளி.....

மின்னியது;
ஏழையின் கண்ணுக்கு.....
மலை இல்லா
குற்றாலமாய்......!

------------------------------------------- தாமரையான் 
காதல் திருமணம்....!







மீனுக்கும் தூண்டிலுக்கும்
காதல் 
திருமணம்....!
மீனின் பெற்றோருக்குத் தெரியாமல்.....!


திருமணம் ஆன
மகிழ்ச்சியில்...
பிறந்த வீடாம் கடலிலிருந்து 
புகுந்த வீடாம் கரைக்கு 
வந்தால்...
மீனுக்கு அதிர்ச்சி.....!


காரணம்......?
கரையில் தன்னைப் போல் 
பல மீன்கள்.....
வாழாவெட்டியாய்......!


துணையாம் தூண்டிலைக் 
கண்டது மீன்.....
தூண்டில் மீண்டும் 
சென்றது 
கடலுக்கு......
மறுமணம் செய்ய..........!


.............................................தாமரையான் :)