பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Thursday, May 27, 2010


மழையில் பிழைத்தவன்...!  



வான்மகள் 
தன் 
கண்ணீரை 
சிந்தி முடித்த நேரம்.....!

மரங்களில் ஒதுங்கிய 
பறவைகள் 
தம் 
வீடுகள் நோக்கிய நேரம்...!

சாலைகளின் ஓரங்களில் 
நின்று 
கண்ணீரை ரசித்த 
ஜீவன்கள் நகர்ந்தன....!

எவரெவர் ஒதுங்கினாலும் 
தான் மட்டும் 
ஒதுங்கத் தெரியாமல் 
நனைந்த நிலம்...!

அதை 
மேகத்தின் பின் நின்று 
எட்டிப் பார்த்து 
சிரித்தது 
சூரியன்....!

வானின் கண்ணீரைத் 
துடைக்க 
முயன்றார் போல்  
வானுயர்ந்த கட்டிடம்....!

திடீரென சரிந்தது 
உச்சி 
முதல் 
பாதம் வரை....!

ஆனால் ஆச்சரியம் 
பாதிப்பு.....
வெளியில் 
இருந்து பார்த்தவருக்கு....!

காரணம்.....?
துள்ளிக் குதித்து 
மான் 
போல சென்ற  
என்னவளின் பாதங்கள்.....!

ஆம்....!
தேங்கியிருந்த நீரில் 
படுத்திருந்த 
கட்டிடத்தின் பின்பம்....
சரிந்தது 
என்னவள் 
கால் கொண்டு குதித்ததில்...!

பாவம்....! 
வெளியில் இருந்தவர் 
எவருக்குத் தெரியும்...
மானுக்கு 
ஆடவும் தெரியும் என்று?

அதிர்ச்சியில் 
குலைந்தனர்.....!
நீரில் கலங்கிய 
கட்டிடத்தின் பின்பம் போல்.....! 

கலங்கியதில் 
பிழைத்தவன்....!
விளக்குகிறேன் வார்த்தையில்...! 

                                          ----------- தாமரையான்!