சன்'மானம்'.....?
பொங்கும்
உலைகள்....!
கண்ணீரை மறந்து
காய்ந்த
கண்கள்....!
உணவின் திடீர் வரவால்
எட்டிப்பார்க்கும்
வரி விழுந்த வயிறுகள்....!
நடப்பதர்க்குதான் நான்
என்று
உணர்ந்த கால்கள்......!
விழாக்காலங்களின் உணர்ச்சியை
உணர்ந்த
உள்ளங்கள்.....!
இறுதியாய் கூறியது
அந்த
ஏழையின் மனம்....!
"தெனம் இப்டி இடைதேர்தல் வந்தா எப்டி இருக்கும்....?"
-------------------------------------------------------------- தாமரையான் :)