கண்ணீர் மழை !
இருந்தேனடி
என் அழகை நினைத்து................!
சூரியனும் என்னைத்தான்
தினம் சந்திக்க
வருவதாய் நினைத்தேன்........!
வெள்ளைப் புறாவும்
என் நிறம் கண்டு
மனம் நொந்ததாய் கேள்வி.....!
நிலவும் என் முதுகில்
நீந்ததான்
துடித்ததென்று நினைத்தேன்.....!
அத்தனை இன்பமும்
அடிப்பெண்ணே உன்னை நான்
காணும் வரை மட்டுமே.........!
வியந்தேன்.......
என் இனத்தவர் இறங்கி
தரைக்கு
வந்ததென்று .......!
பின்புணர்ந்தேன் அந்த
அழகின்
பிரதிபலிப்பு நீயென்று.....!
சூரியனும் வெண்புறாவும்
தேடி வந்தது
எனக்காக அல்ல உனக்கு
என உணர்ந்தேன்......!
பின் செருக்கிழந்து
கார்மேகமாய் மாறி
உன் காலடியை
தேடிப் பொழிந்தேன்
நான் மழையாய்..........!
மதிப்பு உனக்கு.....
மரணம் எனக்கு......!
----------------------------------- மேகம்!