இது என் சிறு கற்பனை.....
கணவன் - கை விரல்
மனைவி -பேனா
கணவன் - கை விரல்
மனைவி -பேனா
மனைவியின் பிரசவத்தை கணவன் சொல்வது போல்.............!
பிழை இருந்தால் சுட்டவும்........!
-------------- தாமரையான்....!
.jpg)
என்றும் முதல் பிரசவம்....!
என் "அவளுக்கு"
இந்த பிரசவம்
புதிதல்ல..........!
இருப்பினும் ஒவ்வொரு முறையும்
தலைப் பிரசவம் போல்-
ஒரு பதற்றம்.......!
வெள்ளைப் படுக்கையில் (காகிதம்)
சிந்தும்
என்னவளின் நீல ரத்தம்.........!
கற்பனைக் கருவறையில்
இருந்து
என் குழந்தைகள்
தமிழாய் வெளியேற.......!
தாயாவளின் கண்களில்
கண்ணீர்
வெள்ளம்.............!
ஆண் என்னுள்
தந்தை ஆன
மகிழ்ச்சி..........!
எங்கள் குழந்தைக்கு
நாங்கள் இட்ட
பெயர்.....
தமிழ்க் கவிதை..........!
------------------------------------------- கை விரல்கள் !