பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Monday, July 20, 2009


ஒளியின் பின்னால் வலிகள்............!

|
|
|
|
|
\/


அன்புத் தோழர்களே....
வானத்தில் இரவு நேர சூரியன் போல் மின்னும் பட்டாசுகள் நம் மனதுக்கு மகிழ்ச்சி......
அந்த ஒளியின் பின் பல சிவகாசி ஏழைகளின் கண்ணீரும் சோகமும் உள்ளது என்றல் நம்ப முடிகிறதா.....?

2௦.07.2௦௦9--- கருப்பு தினம் !

சிறு ஊசி வெடி கையில் வெடித்தாலே, நம் காது வலிக்கும். அனால், நேற்று(2௦.௦7.2009) சிவகாசியில் ஒரு பட்டாசு ஆலையில் நாற்பது வெடி மருந்து அறைகள் வெடித்து சிதறின. இறந்தவர்கள் எண்ணிக்கை பல...........
அனைவரும் படிப்பறிவில்லாத ஏழைகள். நேற்றைய நாளும் சிவகாசிக்கு ஒரு கருப்பு தினம். நேற்றைய சிவகாசி, பல ஏழைகளின் கண்ணீருடனும்,துக்கத்துடனும் இருளில் மூழ்கியது.

இது சிவகாசிக்கு ஒன்றும் புதிதல்ல.............. போன பல உயிர்களில் இதுவும் ஒன்று..............

காரணம்.....?

௧) அறியாமை.
௨) வறுமை ௩) முதலாளிகளின் லாப நோக்கம்.

தன் குடும்பத்தின் பசி போக்க, உயிரின் ஆபத்து அறிந்தும் இந்த தொழிலில் இறங்கும் சூழ்நிலை வாதிகளுக்கு மனம் உருகும் கண்ணீர் அஞ்சலி.....................!

கண்ணீருடன் ,
தாமரையான்



தமிழுக்கும் அமுதென்று பேர்...!




தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!



தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!



வாழ்க தமிழ்....!


--------------பாவேந்தர் பாரதிதாசனார்.