விரலா இல்லை மோதிரமா?
இன்றைய வாழ்வின் அவசரத்திலும் அலைக்கழிப்புகளிலும் நாம் நம்மையே மறந்து பல இடங்களில் கடிவாளம் கட்டிய குதிரை போலும், சுயநல பொம்மை போலும் நடமாடிக் கொண்டிருக்கிறோம் என்பதில் நமக்கு சற்றும் ஐயமில்லை. இருந்தும் சில நேரங்களில் நாம் நம்மையே தூசி தட்டி உலகத்தினுடனான நம் பார்வையை உற்று நோக்குவது அவசியம்.
எடுத்துக்காட்டாக, உங்களின் விரல்களுக்கு ஒரு வைர மோதிரம் இலவசமாகத் தருகிறேன், ஆனால் உங்கள் கையை வெட்டிவிடுவேன்... நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எவரேனும் உங்களிடம் கூறினால் உங்கள் விருப்பம்....... மோதிரமா அல்லது விரலா?
நன்கு படித்த, உலக அனுபவமுள்ள, ஆறாவது அறிவுடைய என் தமிழனே..... நீ மோதிரத்திற்க்காக விரலை இழக்கிறேன் என்றால் நான் என்ன செய்வேன்.........?
புரியவில்லையா.....
சரி.... உங்களுக்கு ஒரு அழகான வீடு இலவசமாய் தருகிறேன், ஆனால் அதில் நுழைவு வாயில்களே கிடையாது எனில் அதன் பயன் என்ன?
ஒவ்வொருமுறை நீங்கள் இலவசத்தை ஏற்கும் போதும் நீங்கள் உங்களையே மறைமுகமாக அடகு வைக்கிறீர்கள் என்று அர்த்தம்.....
சரி.... நான் சொல்ல வரும் செய்திக்கு வருகிறேன்...
1000,2000 என அரசியல்வாதிகள் எவ்வளவு விலை கொடுப்பினும் உங்கள் ஓட்டுக்களை(உங்களை) விற்காதீர்கள்..... அது கண்ணை விற்றுவிட்டு ஓவியத்தை வாங்குவதற்கு சமம்.
ஒருவனும் உத்தமன் இல்லை தான்...... பொருளாதாரமும் மந்தம். ஆகவே எவன் பணம் (அன்பளிப்பு) கொடுப்பினும் தாங்கள் பவ்யமாய் பெற்றுக்கொண்டு உங்கள் ஓட்டுக்களை உங்கள் நன்மையையும், சமுதாயத்தின் நன்மையும் கருத்தில் கொண்டு தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு தாழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நிறைய பணம் வாயத்தவர்களும் பணம் (அன்பளிப்பு) பெற்றுக்கொண்டு அதை ஏழைகளுக்கு தானம் செய்து இலவசமாய் புண்ணியத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ளுமாறு இந்த ஆறாவது அறிவு சமூகத்திற்கு விண்ணப்பிக்கிறது மக்களே...........!
இறுதியாக மூன்று கேள்விகள்.....!
இறுதியாக மூன்று கேள்விகள்.....!
1. இந்த திடீர் சலுகைகள் (லஞ்சங்கள்) அவன் ஆட்சியில் இருக்கும் 5 ஆண்டுகள் வரை உதவுமா?
2. உங்களின் விலை வெறும் ஐந்நூருகளிலும் , ஆயிரங்களிலும், தானா?
3. உணவுக்கும்,உடமைக்கும் உரிமையை விலை பேசலாமா?
உணருங்கள் உங்களையே.........!
இப்படிக்கு
இலவச புண்ணியம் பெறப்போகும்
ஜீவாத்மா.........! :)