பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Sunday, September 20, 2009

சொல்லடி சிவசக்தி!





நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?

சொல்லடி சிவசக்தி! - எனைச்

சுடர்மிகு மறிவுடன் படைத்தது விட்டாய்,

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி,சிவசக்தி! - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நிதம்

நவமெனச் சுடர்தரும் உயிர்க்கேட்டேன்!

தசையினைத் தீ சுடினும் - சிவா

சக்தியைப் பாடுநல் லகன்கேட்டன்,

அசைவறு மதிகேட்டேன்; - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுள்ளதோ?





- மகாகவி . பாரதி

வணக்கம் தோழர்களே..........!

உலகின்

பல மூலைகளில்
பல முகங்களில்
பல இடங்களில் வசித்தாலும்
நம்மை என்றும் என்றென்றும் ஒன்று சேர்க்கும்
உன்னத விஷயம்.............!






நம் தமிழ்...!


சுவாசிப்போம்.....
நேசிப்போம் ......... நம் தமிழை
நம் உயிர் உள்ள வரை............!




ஏற்கனவே வயது பற்பல கொடிகள்...........!
கி.மு கி.பி. எல்லாம் உன்னுள் அடக்கம்...........!
இருப்பினும்
இன்னும் உன்
ஜீவன் எங்களுள் பெருகுவது
நினைத்து மகிழ்ச்சியே
அன்னையே...........!

வாழ்க நீ என்றென்றும்............!

என்றும் அன்புடன்
தாமரையான்.............!