நிலவு என்பது ஆண்...!
இரவென்னும் பூங்காவில்
தூங்கும்
இந்த
வெள்ளைப் பின்பத்தை...
பெண்ணுடன்
யார் ஒப்பிட்டது....?
அது ஆண்..!
கேட்டால் காரணம்...?
சொல்வேன் ஆயிரம்...!
இரவு நேரம்
என்னவளை
நான் பின்தொடர்ந்தால்...
நிலவும்
தொடர்கிறது அவளை...
எனக்குப் போட்டியாய்...!
அதிகாலை வேளையில்
வீதியில்
அவள்
போடும் கோலம்...
எனக்கு முன்பே
நிலவின் கண்களால்
திருடப்பட்டு விடுகிறது...
வீதி வரை
மட்டுமே
என்னவளின் தரிசனம்
எனக்கு...!
ஆனால்
நிலவுக்கோ அவளுடன்
வீட்டு மாடியில்
இரவு நேர விருந்து...!
நிலாச் சோராம்...!
ஆனால்...
என்னை விட
நிலவு
நன்றாகவே
தேய்கிறது..
என்னவளின் நினைவில்...!
"பூமியை நிலவு சுற்றுகிறது"
என்பது
அபத்தம்...!
நிலவு சுற்றுவது
என்னவளை
என்பதைச் சொன்னால்
நம்புமா உலகம்...?
இல்லை 2-ம் வகுப்பு
அறிவியல் புத்தகத்தில்
தான் மாற்றுமா...?
ஆனால் என்னவளே...
நிலவு
என்னை விட
அழகென்று
கட்சி மாறாதே...
அமாவாசை ஆனாலும்
கிரகணம் ஆனாலும்
நான் இருப்பேன் உனக்காக...!
நிலவவன் இருப்பானா
என கேட்டுக்கொள்...!
பேதைப் பெண்கள்..
பொய் சொல்பவனையும்...
ஜாலக்காரனையும் தான்
நம்புகிறார்கள்...!
நீ நடத்து நிலவே...!
ஹ்ம்ம்... நானும் ஒரு விஞ்ஞானி தான்...
நிலவு
ஒரு ஆண்
என
கண்டெடுத்த
காதல் விஞ்ஞானி....!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - தாமரையான்...!