அன்புத் தீவு..!
கண்ணீரின்
பிறந்த நாள் விழாவிற்கு
வந்திருக்கும்
அனைவரையும்
வருக வருக
என வரவேற்கிறேன்...!
தாய்
ஊட்டும் சோற்றின்
கடைசி மிச்சமாய்
இந்த நாள்
நம் கையில்...!
கோப்பையில் ததும்பிய
தேநீராய் நாம் -
இந்த நான்கு வருடங்கள்...!
ஆனால் இன்று...
காலச் சூட்டில்
ஆவியாய் கரைந்து
உலகம்
என்னும் காற்றில்
கலக்கப் போகிறோம்...!
இந்த நான்கு வருடங்கள்...
ஒரு பார்வை...!
மகிழ்ச்சிகளால்
மட்டுமே சூழப்பட்ட
ஒரு
சதுரத் தீவு -
நம் வகுப்பறை...
இங்கு
'ப்ரியம்'-க்கு பஞ்சமில்லை..!
ஆம்...
'பிரிய'தர்ஷினி - யில் ஆரம்பித்து
செல்வ'ப்ரியா' -வில் முடியும்
எங்கள் வகுப்பிற்கு
"பிரியத்திற்கு" என்றுமே
குறை இருந்ததில்லை...!
ஒரு நாட்டிற்கு
ஒரு அரசன் இருக்கலாம்..
ஆனால்
எங்கள்
அன்புத் தீவில்
பல ராஜ் குமார்-கள்....!
மதம், இனம், மொழி
என
எதுவாயினும்
அதை சம்மட்டி
கொண்டடித்து
சமரசத்தை வேருன்றியவர்கள் நாம்...!
எங்கள் உணவுப்பெட்டி
என்றுமே
கையின் நிறம் பார்த்துத் திறந்ததில்லை...!
எங்கள் இருக்கைகள்
என்றுமே
யாரையும் மதம் பார்த்து அமர்த்தியதில்லை...!
'பணம்' என்ற காகிதம்
இந்தத் தீவில்
என்றுமே செல்லாது...!
ஆனால்
'நட்பு' என்ற சொத்து
இருந்தால்
நம்மை ஒன்றும் வெல்லாது..!
இன்பத்தைச் செர்த்தளித்து
துன்பத்தைப் பகுந்தளிக்கும்
பங்காளிகள் நாம்..!
எங்கள் தீவில்
கண்ணீருக்குப்
பிறப்பில்லை...!
அனால் மகிழ்ச்சிக்கு
இறப்பில்லை...!
பணக்காரன் ஆயினும்
ஏழை ஆயினும்
அவன்
பிறந்த நாள் - இங்கு
சிறந்த நாள்...!
நளபாகம் என்றாலும்....
நமத்துப் போனது என்றாலும்...
மதிய வேளையில்
இங்கு
உணவுத் திருவிழா தான்...!
இடியே விழுந்தாலும் - இந்தப்
பூமி பிளந்தாலும்
வகுப்பறையில் தூங்கும்
கனவான்களுக்கு
என்றுமே கவலையில்லை...!
ஆய்வுக் கூடம்
என்றாலும்
அதில்
பாய் விரித்து
படுக்க
நாம் என்றுமே யோசித்ததில்லை...!
கட்டிப் புரண்டு
உருண்டாலும் ...
சண்டைக்குப் பின்
கட்டிப் பிடித்து
இளைப்பாற
நாம் என்றுமே மறந்ததில்லை...!
"நான்" விடுப்பு என்றால்
எனக்காக
"அவன்" "நான்" - ஆய்
மாறும்
அதிசயம்
வேறு எங்கும் நேர்ந்ததில்லை...!
இருபது ரூபாய் பொருள்
வாங்கினாலும் -
அதற்க்கு
அறுபது ரூபாய்
விருந்து
வெய்ப்பதும் இங்கே தான்...!
இப்படிப் பட்ட
ஆனந்தம்
நிறைந்த
நாம் இருப்பதால் தான் என்னவோ
இந்தத்
அன்புத் தீவு
அமைந்த இடம்..
ஆனந்த் நகர் ...!
இங்கே
விதிமுறை உண்டு..
வரைமுறை இல்லை...
ஏற்றம் உண்டு...
தாழ்வு இல்லை...
பரஸ்பரம் உண்டு..
பரிதாபம் இல்லை...
சமரசம் உண்டு...
சச்சரவுகள் இல்லை...
பெருமைகள் உண்டு...
பொறாமைகள் இல்லை...
இந்த நாகு வருடங்கள்
தந்த
வாழ்க்கைக்கு - பரிசாய்
நாம்
பகுந்தளிக்க இருப்பது
பல முத்தங்கள்...!
முதலில்...
இந்த பல்கலைக்கு
நம்மைச் சேர்த்த
பெற்றோருக்கு
ஆயிரம் முத்தங்கள்....!
இந்த
பீனிக்ஸ் பறவைகளின்
சரணாலயமாய்
அமைந்த
கலசலிங்கம் பல்கலை-க்கு
ஆயிரம் முத்தங்கள்...!
"நான்" என்று
வந்த என்னை...
"நாம்" என்றாக்கிய
நம் நட்ப்பிர்க்கு
ஆயிரம் முத்தங்கள்...!
என் தோல் தழுத்த
நேரத்தில் - என்
தோழ் தட்டிய கைகளுக்கு
ஆயிரம் நன்றிகள்...!
கண்ணீரைப் பிரசுவிக்க
என் கண்கள்
தயாராகும் ஆகும்போது...
அந்தக் கண்களில்
கருகலைப்பு செய்த
ஒவ்வொரு விரலுக்கும்
ஆயிரம் முத்தங்கள்....!
அந்தஸ்து, எதிர்பார்ப்பு
அகங்காரம், பொய்மை
சாதி, மதம்,
இனம், மொழி, பணம்
என என்னற்றவைகளுக்கு
சமாதி கட்டிய
உள்ளத்திற்கு
கோடான கோடி முத்தங்கள்...!
பழக்கம் இல்லாவிட்டாலும்
இந்த நட்பிற்கு
என்னை
புழக்கம் செய்த
ஒவ்வொரு
இதயத்திற்கும்
லட்சோபலட்ச நன்றிகள்...!
இந்தக் கல்லூரியை
நான்
நிகவும் நேசிக்கிறேன்...
எனக்கு அறிவு புகட்டியதர்க்கா...?
இல்லை...
எனக்கு பட்டம் வழங்கியதற்க...?
இல்லவே இல்லை...
எனக்கு வேலை தந்ததற்கா...?
கண்டிப்பாக இல்லை..
பின் எதற்க்காக...?
எனக்கு
வாழ்க்கையின்
அர்த்தங்களைத் தந்ததற்கு...!
உறவுகளின்
உன்னதத்தை விளக்கியதற்கு...!
"நட்பு" - என்னும்
இந்த
அளவில்லா
செல்வத்திற்கு
நான் அளித்த லட்சங்கள்....
கடலில் தொலைத்த கடுகு தான்...!
இன்று நம் பிரிவால்
நாம்
சிந்தும்
ஒவ்வொரு துளி
கண்ணீரும்...
நம் கல்லூரியின்
மூத்த மாணவர்கள்
சிந்திய கண்ணீருடன் சேரட்டும்....
கல்லூரியின்
ஒவ்வொரு செங்கலும்
நம் நட்பை...
நம் இருப்பை..
நம் சிறப்பைப் போற்றட்டும்...!
இந்த கூட்டம்...
நம்
பிரிவை அறிவிக்க அல்ல...
நாம்
என்றுமே
தொடர்பில் இருப்போம்
என்ற உறுதி மொழி எடுக்க..!
கலங்காதே தோழனே...
காலம் என்பது
காற்றாட்டு வெள்ளம் தான்...
அனால்...
அது அடித்துச் செல்ல...
நாம் ஒன்றும் செம்மண் சுவர் அல்ல...
சீனப் பெருஞ்சுவர்..!
இன்றல்ல.....
நாளையல....
என்றுமே
இதே அன்போடு...
உரிமையோடு...
நட்போடு...
நாம் இருப்போம்
என
மனமார
உறுதியளித்து விடைபெறுகிறேன்...!
நான் பயின்ற என் வகுப்பிற்கு இதை காணிக்கை ஆக்குகிறேன்...!
என்றும் உங்கள்
தாமரையான் :)