கண்ணம்மா என் காதலி....! :-)
சுடும்விளிச் சுடர்தான் - கண்ணம்மா ! சூரிய சந்திரரோ? வட்டக் கரியவிழி, - கண்ணம்மா ! வானக் கருமைகொல்லோ? பட்டுக் கருநீ லப் - புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் - தெரியும் நட்சத்திரங்க ளடி!
சோலைமல ரொளியோ - உனது சுந்தரப் புன்னகைதான் ? நீ லக்கட லலையே - நிந்தன் நெஞ்சின் அலைக லடீ! கோலக்குயி லோசை - உனது குரலின் இனிமையடீ....! வாலைக் குமரியடி, - கண்ணம்மா ! மருவக் காதல்கொண்டேன்!
சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா ! சாத்திரம் ஏதுக்கடீ? ஆத்திரம் கொண்டவர்க்கே, - கண்ணம்மா! சாத்திர முண்டோடி? மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்புசெய்வோம், காத்திருப்பேனோடீ ? - இதுபார் கன்னத்து முத்தமொன்று....!
- முண்டாசுக் கவிஞன் !