அந்நியராக.....!
பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ
என்று கேட்கிறது ஐயரின் சத்தம்...
இங்கே இவளுக்கோ கண்களில் வெட் கம்,
கால்களில் நடுக்கம்......!
மனவாளனோ கம்பீரமாய் தன் வருங்கால
மனைவியை எதிர் நோக்கி
ஆவலுடன் காத்திருக்க....
மணமகளோ கன்னங்களில் ரோஜாக்கள் பூக்க...
பாதங்களில் ஒரு வித தடுமாற்றத் துடன்
பல கோடி கனவுகளுடன் வந்தமர்ந்து
அவனை விழி உயர்த்தி பார்க்கிறா ள் ....
அவனோ ,
அவளது மிருதுவான விரல்களை
அழுத்தி விடுகிறான்
யாரும் பார்க்க வண்ணத்தில்.....!
அந்த அழுத்தத்தில் ஆயிரம் அர்த் தங்கள்
மின்னலென
தாக்கி மறைந்தன .....!
இதில் ஏதும் கவனியாத ஐயரோ
கெட்டிமேளம் கெட்டிமேளம்
என்று குரல் கொடுக்க....
மத்தளம் கொட்ட, நாதஸ்வரம் முழங் க...
தலைவி தன் தலை தாழ்த்தி தலைவனிடம்
மாங்கல்யம் ஏற்று -அக்னியை
வலம் வந்து அனைவரையும்
திரும்பி பார்க்கிறாள் அந்நியராக.....!
- இந்து !
*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*