பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Tuesday, November 24, 2009




புலியின் பிறந்த நாள்.........!


உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் "தமிழ் உணர்வு ரத்தத்தில் கலந்த'' தமிழர்களுக்கு எமது வணக்கங்கள்.......!




நவம்பர் 26.....!


ஒவ்வொரு தமிழனுக்கும் நினைவுபடுத்ப்பட வேண்டிய நாள். 
ஆம்.....திரு.வேலு பிரபாகரனின் பிறந்த நாள்.







வல்வெட்டித்துறையில் திருவேங்கடம்  வேலுப்பிள்ளை , வல்லிபுரம்  பார்வதி ஆகியோருக்கு மகனாய்ப் பிறந்தார். இலங்கைத் தமிழர்களை அந்நாட்டு சட்டம் படுத்தும் பாடு அவரை பொங்கி எழச் செய்தது. அதன் விளைவுகளே பின்னர் நடந்த  அனைத்தும்  விதியின் விளையாட்டுக்கள் என்றால் அது மிகை ஆகாது. சிறு வயதிலேயே TIP என்னும் மாணவர் படையில் சேர்ந்தார்.





1972-ம் ஆண்டு அவர் முயற்சியில் உதயமானது "விடுதலைப் புலிகள்" இயக்கம்.பின் அதில் உள்ள நாட்டமும், பற்றும், வெறியும் அதிகரிக்க 1975 -ல் தமிழ் ராணுவப் படை கொண்டு யாழ்ப்பான ஆளுநர்  Alfred dhuraiyapaah வை முதல் அரசியல் கொலை செய்தார். 


மே மாதம் 1991,1992 -ல் இந்திரா காந்தி கொலை வழக்கில் முதல் முறையாக கைது செய்ய உத்தரவிட்டது. பின்னர் அடுக்கடுக்காக பல பிரச்சனைகள் அவரைப் பின் தொடர்ந்தாலும் அவரின் போராட்ட வாழ்க்கையின் அனுபவங்களும், அணுகுமுறையும் அவரை பல சிக்கல்களைத்  தாண்டி வரச்செய்தன.


பின் காலங்கள் செல்ல செல்ல, அவர் ஒரு சிறந்த போராளியாக வெளிப்பட்டார். ஆண்டன் பாலசிங்கம்,பொட்டு அம்மன் போன்றோர் இவர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் என்பது அனைவரும் அறிந்ததே.





பின்னர் இலங்கை ராணுவ இன்னல்களாலும், சில நாடுகளின்  ரகசிய உதவியாலும் பிரபாகரனின் இயக்கத்திற்கு கஷ்ட காலம் நேரிட்டது. 


கடந்த மே 19,2009 அன்று தலையில் குண்டடியுடன் அவர் உடல் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது . அது அவர் அல்ல என்றும், அவர் தான் என்றும் பல சர்ச்சைகள் இன்றுவரை தொடர்கின்றன


'அவர் உடல்' எனவும் ஒரு உடல் காட்டப்பட்டது.மக்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்களில் இருந்தனர் என்பது அனைவரும்  அறிந்ததே.





அவர் பிறந்தநாளான தேதியில்(26.11.2009) அவர் 'இறந்திருக்கும் பட்சத்தில்' அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். 


வாழ்க தமிழ் உணர்வு ...!
வளர்க தமிழ் பற்று ...!



இவண்
தாமரையான். :-))

No comments: