பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Thursday, November 26, 2009

மாவீரர் தினம்.....!

வணக்கம் தமிழர்களே.......
மீண்டும் ஒரு சுவாரசியத் தகவலுடன் நான் உங்கள் முன்......!
நவம்பர் 27 .....
அனைத்து ஈழத் தமிழர்களுமே கொண்டாடும் நாள்......
அதுதான் மாவீரர் தினம்.....!






ஈழப் போரில் உயிர் நீத்த ஒவ்வொரு தியாகச் சுடருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.


ஒவ்வொரு மாவீரர் தினத்தன்றும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் மக்களுடன் உரையாடுவார். அவர் 
இறந்துவிட்டார் என்று இலங்கை அரசு கூறியது உண்மையா இல்லையா என தெரிந்து கொள்ள அனைத்து மக்கள் இனமே காத்திருப்பது நாளைய 
நாளுக்காகத்தான். .......!


நாளை திரு.பிரபாகரன் திரையில் தோன்றி மக்களுடன் உரையாடுவாரா, இல்லையா என்பதே தற்பொழுது பெருகிவரும் பரபரப்பு.........!
காலத்தின் கைகள் நம்மையும் பொறுத்திருந்து பார்க்க ஜாடை செய்கிறது.... :-)


எதுவாயினும் தங்கள் இன மக்களுக்காக,நாட்டுக்காக ஜாதி மதம் கடந்து போர்க்களத்தில் உயிர் நீத்த ஒவ்வொரு தேசப்பற்று கொண்ட தியாக உள்ளத்துக்கும் இந்த தமிழனின் மனப்பூர்வமான நன்றிகள் கண்ணீருடன்.........!




இவர்கள் அனைவரின் உயிரிழப்புக்கும் காலம் சொல்லட்டும் பதில்.........!


கண்ணீருடன்



தாமரையான் :-((

No comments: