அனைவருக்கும் கவலை கலந்த வணக்கம்..........!
இந்த உலகத்தில் பல மனிதர்கள் தங்களின் நல உள்ளதாலும், பொது நல மனதாலும், கடின உழைப்பாலும் , தான் இறந்தாலும் மக்களின் உள்ளத்தில் நீங்க இடம் பெற்று சிறந்து வாழ்கிறார்கள்.
அத்தகைய மகான்களில் ஒருவர் தான் நம் கருப்பு காந்தி திரு.காமராஜர். அவரின் பொது நல வாழ்க்கை சுயநலமற்றது.அதோடு பாராட்டத்தக்கது. அந்த உத்தமரின் பெயரையும்,நிழல் படத்தையும், சில மக்கள் (மாக்கள்) தவறாக உபயோகிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு சுவரொட்டியை நான் பார்த்தேன். ஒரு ஜாதி மாநாட்டிற்கு கர்ம வீரரின் நிழல்படம் கொண்டு விளம்பரப் படுத்தப்படுள்ளது. இது ஒரு தவறான அணுகுமுறை. ஒருவரின் உழைப்பையும்,பெருமையையும் இவ்வாறு தவறான நோக்கத்தில் மக்கள் மனதில் விதைப்பது வேதனைக்குரியது.
இனிவரும் நம் காலத்திலாவது ஜாதி,மதம் ஒழியும் என்ற நம்பிக்கையில்
தாமரையான்
No comments:
Post a Comment