பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Sunday, September 27, 2009

அனைவருக்கும் கவலை கலந்த வணக்கம்..........!




இந்த உலகத்தில் பல மனிதர்கள் தங்களின் நல உள்ளதாலும், பொது நல மனதாலும், கடின உழைப்பாலும் , தான் இறந்தாலும் மக்களின் உள்ளத்தில் நீங்க இடம் பெற்று சிறந்து வாழ்கிறார்கள்.
அத்தகைய மகான்களில் ஒருவர் தான் நம் கருப்பு காந்தி திரு.காமராஜர். அவரின் பொது நல வாழ்க்கை சுயநலமற்றது.அதோடு பாராட்டத்தக்கது. அந்த உத்தமரின் பெயரையும்,நிழல் படத்தையும், சில மக்கள் (மாக்கள்) தவறாக உபயோகிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு சுவரொட்டியை நான் பார்த்தேன். ஒரு ஜாதி மாநாட்டிற்கு கர்ம வீரரின் நிழல்படம் கொண்டு விளம்பரப் படுத்தப்படுள்ளது. இது ஒரு தவறான அணுகுமுறை. ஒருவரின் உழைப்பையும்,பெருமையையும் இவ்வாறு தவறான நோக்கத்தில் மக்கள் மனதில் விதைப்பது வேதனைக்குரியது.
இனிவரும் நம் காலத்திலாவது ஜாதி,மதம் ஒழியும் என்ற நம்பிக்கையில்

தாமரையான்

Thursday, September 24, 2009

மறுமுறை ஒரு முறை பார்ப்போமா ?

தமிழர்களுக்கு வணக்கம்.....!
ஈழத்தில் வாழ்ந்தும் , வாழ்ந்துகொண்டு இருக்கும் என் ஒவ்வொரு தமிழ் இதயத்துக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்......!
பாடல் உடல் (வரிகள்) - கவிப்பேரரசு
பாடல் உயிர் (இசை) - ரகுமான் . அ . ர
பாடல் இதயம் (உருவாக்கம்)-கோபால ரத்னம் சுப்ரமணியம்

கண்களில் பெருகும் கண்ணீர் இதயத்தில் உரசும் வலிகள்.....! இதற்க்கெல்லாம் காலம் சொல்லட்டும் பதில்..........!






விடை கொடு எங்கள் நாடே ..........!
கடல் வாசல் தெளிக்கும் .........!
பனை மரக் காடே , பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா ?

உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் (விடை கொடு ...)
கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா ? வருமா ? (2) சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா ? வருமா ?

கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே ? (2)



பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிரோம் மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம்
(விடை கொடு ...)

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைதொம்(2) எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைத்தோம் முன் நிலவில் மலரில் கிடந்தோம் ,
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம் வனமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்




தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்

(விடை கொடு ...)

என்றும் தமிழன்
தாமரையான்

Sunday, September 20, 2009

சொல்லடி சிவசக்தி!





நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?

சொல்லடி சிவசக்தி! - எனைச்

சுடர்மிகு மறிவுடன் படைத்தது விட்டாய்,

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி,சிவசக்தி! - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நிதம்

நவமெனச் சுடர்தரும் உயிர்க்கேட்டேன்!

தசையினைத் தீ சுடினும் - சிவா

சக்தியைப் பாடுநல் லகன்கேட்டன்,

அசைவறு மதிகேட்டேன்; - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுள்ளதோ?





- மகாகவி . பாரதி

வணக்கம் தோழர்களே..........!

உலகின்

பல மூலைகளில்
பல முகங்களில்
பல இடங்களில் வசித்தாலும்
நம்மை என்றும் என்றென்றும் ஒன்று சேர்க்கும்
உன்னத விஷயம்.............!






நம் தமிழ்...!


சுவாசிப்போம்.....
நேசிப்போம் ......... நம் தமிழை
நம் உயிர் உள்ள வரை............!




ஏற்கனவே வயது பற்பல கொடிகள்...........!
கி.மு கி.பி. எல்லாம் உன்னுள் அடக்கம்...........!
இருப்பினும்
இன்னும் உன்
ஜீவன் எங்களுள் பெருகுவது
நினைத்து மகிழ்ச்சியே
அன்னையே...........!

வாழ்க நீ என்றென்றும்............!

என்றும் அன்புடன்
தாமரையான்.............!

Thursday, September 17, 2009


காலில் காலில் காலில் நிறமுண்டு!





சகியே சிநேகிதியே ..................... காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!
சகியே
சிநேகிதியே .................... என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு...!

பச்சை நிறமே பச்சை நிறமே...........! இச்சை மூட்டும் பச்சை நிறமே..........
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..... எனக்கு சம்மதம் தருமே...!

பச்சை நிறமே பச்சை நிறமே..........! இலையின் இளமை பச்சை நிறமே..........!
உந்தன் நரம்பும் பச்சை நிறமே...... எனக்கு சம்மதம் தருமே...
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே..........

கிளையில் காணும் கிளியின் மூக்கு......... விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு.........
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா......... பூமி தொடா பிள்ளையின் பாதம்.... எல்லா சிவப்பும் உந்தன் கோபம்...... எல்லா சிவப்பும் உந்தன் கோபம்....!

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்.... அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்...
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள்... கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்.....
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்...
மாலை நிலவின் மரகத மஞ்சள்.... எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்....!


சகியே சிநேகிதியே ..................... காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!
சகியே
சிநேகிதியே .................... என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு...

அலையில்லாத ஆழி வண்ணம்........ முகிலில்லாத வானின் வண்ணம்...
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம்... குவளைப் பூவில் குழைத்த வண்ணம்...
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்....
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்... எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்..

இரவின் நிறமே இரவின் நிறமே......... கார்காலத்தின் மொத்த நிறமே........
காக்கைச் சிறகில் காணும் நிறமே..... பெண்மை எழுதும் கண்மை நிறமே.....
வெயிலில் பாடும் குயிலின் நிறமே....
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே.... எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே!

சகியே சிநேகிதியே ..................... காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!
சகியே
சிநேகிதியே .................... என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு...

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...
மழையில் முளையும் தும்பை நிறமே...
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே... விழியில் பாதி உள்ள நிறமே......
மழையின் முளையும் தும்பை நிறமே... உனது மனசின் நிறமே...
உனது மனசின் நிறமே... உனது மனசின் நிறமே.........!

- கவிப்பேரரசு வைரமுத்து




Friday, September 4, 2009


தமிழர்களுக்கு வணக்கம்....!

எம்மொழியில் நல்லவை இருப்பினும் வரவேற்ப்பான் தமிழன்....!

Pray For ME brother....!




Pray for me brother
Pray for me brother
Pray for me sister
Are you searchin’….
Pray for me brother

Lookin’ for the answers To all the questions In my life
Will I be alone Will you be there By my side
Is it something he said Is it something he did
I wonder why He is searchin’ For the answers
To stay alive

Could you ever listen Could you ever care
To speak your mind
Only for a minute For only one moment
In time

The joy is around us But show me the love
That we must find
Are you searchin’ For a reason to be kind, to be kind…
He said… Pray for me brother

Pray for me brother Pray for me sister
Pray for me brother Say
what you wanna say now
But keep your hearts open
Be what you wanna be now
Let’s heal the confusion
Pray for me brother

Don’t let me take When you don’t wanna give
Don’t be afraid Just let me live
Don’t let me take When you don’t wanna give
Don’t be afraid Say what you wanna say now
But keep your hearts open

Be what you wanna be now Let’s heal the confusion
Pray for me brother Pray for me brother
I’m ashamed ah, brother be dying of poverty
when he down on his knees its only then he prays
And it’s a shame ah, brother be dying of ignorance
cos the world is a trip and everybody’s a hypocrite
Need to stop ah , taking a look at the other
I’m not ashamed of poverty
need to be making his life better
So think about it, think about it once more
cos life is a blessing and it’s not justa show, ah
Round and round the world is spinning around

We need to be singing a prayer, we need to be singing it now
Round and round the world is turning around
We need to be singing a prayer, we need to be singing it now
Need to be feeling the power, need to be feeling the faith
We need to coming together just to win this race

Need to be feeling the power, need to be feeling the faith
We need to coming together just to win this race (twice)
Are you searching for a reason to be kind ?

பாடலை பாடிய தமிழனுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.....!

மகிழ்ச்சியுடன் தாமரையான்.....! :-))

Thursday, September 3, 2009

கண்ணம்மா என் காதலி....! :-)




சுடும்விளிச் சுடர்தான் - கண்ணம்மா ! சூரிய சந்திரரோ? வட்டக் கரியவிழி, - கண்ணம்மா ! வானக் கருமைகொல்லோ? பட்டுக் கருநீ லப் - புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் - தெரியும் நட்சத்திரங்க ளடி!
சோலைமல ரொளியோ - உனது சுந்தரப் புன்னகைதான் ? நீ லக்கட லலையே - நிந்தன் நெஞ்சின் அலைக லடீ! கோலக்குயி லோசை - உனது குரலின் இனிமையடீ....! வாலைக் குமரியடி, - கண்ணம்மா ! மருவக் காதல்கொண்டேன்!

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா ! சாத்திரம் ஏதுக்கடீ? ஆத்திரம் கொண்டவர்க்கே, - கண்ணம்மா! சாத்திர முண்டோடி? மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்புசெய்வோம், காத்திருப்பேனோடீ ? - இதுபார் கன்னத்து முத்தமொன்று....!

- முண்டாசுக் கவிஞன் !

Tuesday, September 1, 2009

நீ என் தின்னுயிர் கண்ணம்மா .....!




காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன், - அமு தூற்றினை யொத்த இதழ்களும்- நில ஊறித் ததும்பும் விழிகளும், - பத்து மாற்றுப் பொன் ஒத்தநின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்- எனை வேற்று நினைவின்றித் தேற்றியே- இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே - இந்தக் (காற்று வெளியிடைக்)

நீ என் தின்னுயிர் கண்ணம்மா -எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் -துயர் போயின,போயின துன்பங்கள்- நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் வாயினி லேயமு தூறுதே - கண்ணம் மாவென்ற பேர் சொல்லும் போழ்திலே -உயிர்த் தீ யினி லேவளர்சோதியே - என்றன் சிந்தனையே என்றன் சித்தமே ! இந்தக் (காற்று வெளியிடைக்)

- மகாகவி !