பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Tuesday, June 19, 2012


விடியல் விரைவில்....!!! 


இதயம் 
என்பதொரு பாய்மரம்... 
தினம் வழிகாட்டும் 
இதயங்கள் ஆயிரம் ...

உன்னை நீ
கல் எனக்கூறினால் 
உளியிடம் வலிதாங்கிச்
உருவம்தான் மேலிதாகிச் 
ஒரு 
சிலையாகச் சொல்வார்...!!!

இல்லையேல் நீ
தங்கம் எனக்கூறினால் 
செந்தீயில் தானுருகி
தண்ணீரில் அமிழ்ந்து 
பின்
நகையாகச் சொல்வார்...!!!

சரி இரண்டுமில்லை,
நான் மழையென்று நீ கூறினால்
சிப்பியில் அடைபட்டு
இருட்டிலே சிறைபட்டு
வெண் 
முத்தாகச் சொல்வார்...!!!

செவி சாய்க்காதே மனமே...
மனம் பொறுக்காதே  ஒரு கணமே...!!!

மலைத்தாய் பிரசுவித்து 
கால் ஆனது 
பிறர் உன்னை 
தன் இஷ்டத்திற்கு செதுக்கவா....???

நிலக்கரியை மண்ணில்
தவம் இருந்து
நீ தங்கமாய் மாறியது
அற்ப நகை ஆகவா...???

மேகத்தை விடுபட்டு
காற்றில் புறப்பட்டு 
மழை ஆனது
பிறர் இச்சைக்காகவா...???

சிலையென நிற்காதே...
சிகரம் நோக்கு...!!!

ஆபரணம் ஆகாதே...
சுய பயனற்றுப் போகாதே...!!!

வெண் முத்து ஆகாதே...
கடற்க்குடி கொண்டு விலகாதே...!!!

உன் பிறப்பிற்கும் 
ஒரு மர்மமிருக்கும்...
உயரியதொரு 
காரணமிருக்கும்...!!!

முயற்சி கொண்டு உழை...
ஏற்பக் கிடைக்கும் விலை...
உன் பிறப்பு மர்மம் களை...!!!

விடியல் உன் வாழ்வில் விரைவில்....!!! 

No comments: