பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Tuesday, June 19, 2012


விடியல் விரைவில்....!!! 


இதயம் 
என்பதொரு பாய்மரம்... 
தினம் வழிகாட்டும் 
இதயங்கள் ஆயிரம் ...

உன்னை நீ
கல் எனக்கூறினால் 
உளியிடம் வலிதாங்கிச்
உருவம்தான் மேலிதாகிச் 
ஒரு 
சிலையாகச் சொல்வார்...!!!

இல்லையேல் நீ
தங்கம் எனக்கூறினால் 
செந்தீயில் தானுருகி
தண்ணீரில் அமிழ்ந்து 
பின்
நகையாகச் சொல்வார்...!!!

சரி இரண்டுமில்லை,
நான் மழையென்று நீ கூறினால்
சிப்பியில் அடைபட்டு
இருட்டிலே சிறைபட்டு
வெண் 
முத்தாகச் சொல்வார்...!!!

செவி சாய்க்காதே மனமே...
மனம் பொறுக்காதே  ஒரு கணமே...!!!

மலைத்தாய் பிரசுவித்து 
கால் ஆனது 
பிறர் உன்னை 
தன் இஷ்டத்திற்கு செதுக்கவா....???

நிலக்கரியை மண்ணில்
தவம் இருந்து
நீ தங்கமாய் மாறியது
அற்ப நகை ஆகவா...???

மேகத்தை விடுபட்டு
காற்றில் புறப்பட்டு 
மழை ஆனது
பிறர் இச்சைக்காகவா...???

சிலையென நிற்காதே...
சிகரம் நோக்கு...!!!

ஆபரணம் ஆகாதே...
சுய பயனற்றுப் போகாதே...!!!

வெண் முத்து ஆகாதே...
கடற்க்குடி கொண்டு விலகாதே...!!!

உன் பிறப்பிற்கும் 
ஒரு மர்மமிருக்கும்...
உயரியதொரு 
காரணமிருக்கும்...!!!

முயற்சி கொண்டு உழை...
ஏற்பக் கிடைக்கும் விலை...
உன் பிறப்பு மர்மம் களை...!!!

விடியல் உன் வாழ்வில் விரைவில்....!!! 

Thursday, May 31, 2012

என்னென்று நான் உரைப்பேன்...???!!! 



அது ஒரு 
இளவேனிர்க் காலம்...

ஒரு தேநீர்க் கடையில் 
எதிரெதிர் திசையில்
அமர்ந்திருந்தோம்
நானும்
அவளும்...!!!

அந்த
குளிரூட்டப்பட்ட அறையில்
அவள் 
இரு கைகள்
மட்டும் கதகதப்பாய்
குவிந்திருந்தது 
என் உள்ளங்கையில்...!!!

அவள் பார்வைகள்
மட்டும் 
பலமணி நேரமாய் 
பரிமாறிக்
கொண்டிருந்த 
பால் பார்வையை
அந்தக் கைகளில் 
ஏந்திக் கொண்டிருந்தேன்...!!!

மகிழ்ச்சியை மொத்தமாய்
குத்தகை
எடுத்திருந்தாலும்
சிக்கனமாய்
சிரித்த
அவள் உதடுகள்
இன்பத் தேயிலை தூளை
தூவிய வண்ணம்
இருந்தது
அந்த பார்வைப் பாலில்...

எல்லாம் சரி...
"சர்க்கரை...???"
என்றேன்...
சட்டென்று சிரித்து
சர்க்கரையையும்
சேர்த்தாள்...!!!

இப்படியொரு
காதல் தேநீரை
நான் பருகிக் கொண்டிருக்க 
வேலைக்காரன்
வந்து
வினவினான்
"என்ன வேண்டும் என்று...!!!"

என்னென்று நான் உரைப்பேன்...???!!!  - தாமரையான் :D