பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Friday, June 11, 2010

விண்ணை தாண்டியவள்...!



என்றுமல்லாமல் 
அன்று ஒரு நாள்....!
இலகுவான 
மாலைப் பொழுது...!

இயற்கையின் மடியில் 
அயர்ந்திருந்த  
நான்....
விண்ணை நோக்கியபடியே.....!

தென்றலென காற்று....
கோலமிட்ட பறவைகள்....
தொலைவில் ஆதவன்....
ரசித்தேன் 
அனைத்தையும்...!

சட்டென ஒரு நொடி....!
புயலென மாறிய 
காற்று....!
வழிவிட்டு ஒதுங்கிய 
பறவைகள்...!

கருப்பன் என் 
உடல் 
வெந்து 
தேறியது சூட்டில்....!

ஆ... ஆச்சரியம்!
மேகத்தை கிழித்து 
கொண்டு....
வெண்ணிற ரெக்கையுடன்
தரை இறங்கிய 
தேவதை....!

இம்மண்ணில்  எவரையும் 
காணாமல்...
நேராய் வந்தாள்
என்னருகே....!

செய்வதறியாது 
திகைத்து நின்றேன்....!
சட்டென 
நின்றாள் என்னருகே....!

உலகமே துச்சம் 
என்பது போல்....
அவள் அழகில் 
என் கர்வம் 
தலைக்கேறியது....!


நிமிடமுள்ளும் 
நேரமுள்ளும் 
முட்டிக்கொண்டு நின்றது 
அவள் அழகில்....!
நொடிமுள்ளாய் நான்...!

கருப்பனுக்கு இத்தனை
குடுப்பினையா?..
என 
இங்கு பலர் வயிற்றில் 
சூரியனின் 
பின்பம்....!

பார்த்த உடன் காதல் 
என்பதில்  
நம்பிக்கை இல்லை....
அன்று வரை...!

காற்றை துரிதப்படுதினேன்...
அவளுடன் 
உரையாட....!
திடீரென ஒரு அதிர்ச்சி...!
வந்தவள் 
சென்றாள் வந்த வேகத்தில்...!

ஆனால்.....
அவள் என்னிடம் 
வந்ததற்கான 
சான்றுகள் மட்டும்.....
என் உடம்பில்....!
விட்டு விட்டு வரைந்த 
வெள்ளை கோடுகளாய்....!

கட்டாயம் மீண்டும் 
வருவாள் 
என காத்திருக்கிறேன் 
இயற்க்கை அன்னையின் மடியில்
சான்றுகளுடன்...!

                                           ------ விமான ஓடு தளம் !  

3 comments:

Anonymous said...

உன் திருவடிகள் என்ன-தங்க புஷ்பமா..?

இப்படி தமிழில் மின்னுகிராயே..!

உன் அமுதக்கவிகளுக்குள் என்னை சிறை பிடித்துவிட்டாய் என் இனிய நண்பா...!

தமிழுக்காக நீ விண்ணைத்தாண்டி வந்தவன்...

நீ வாழ்க நின் தமிழ் வாழ்க..!!!

தாமரையான் said...

நன்றி நண்பா.....
நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா
:)

Gayathri G said...

realy superb :) so nice..Vazhga nin tamil pulamai :)