இதயபுரம்....!
பதிந்த இடத்தில
புல்லும்
புத்துயிர் பெரும்,
ஓவியங்களை ரேகைகளாய்க்
கொண்ட
அவளின் பாதங்கள்....!
பதிந்திருந்தன என்
சிவப்பு
கம்பள தேசத்தில்....!
தேசமெங்கும் கோலாகலம்...
இவளின்
பாதச்சுவடின் வருகையால்.....!
கால் படவில்லை....
ஆனால்
தடம் பதிந்த அதிசயம்....!
சிவப்பு நதி
பாயும்
என் தேசத்தில்
அவளைக்
கண்டார் ஒருவரில்லை...!
கண்கள் வழி
புகுந்து...
நரம்பு வழி
நடந்து....
குருதி வழி
கலந்து...
இதயதமேன்னும் அந்த
சிவப்பு தேசம்
அடைந்தவள் அவள்...!
முன் அனுமதி
ஏதுமின்றி....
அன்பு எனும்
ஆயுதம் கொண்டு
அராஜகம் செய்கிறாள்....!
இங்கே
களவு போவது
பொருள்கள்
அல்ல.....!
அவை கொண்ட
உயிர்கள்....!
அரசன் என்ற
முறையில்
தேசத்தின் காவல் என் கையில்....!
கவனக்குறைவான
கண்களை கைது செய்துவிட்டேன்....!
இனி அது ஒருவரையும் பாராது...!
காவலையும் பெருக்கிவிட்டேன்...!
இனி இந்த
இதயபுரம் விட்டு
இவள்
வெளியேறுவது அசாத்தியமே.....!
அவளைப்
பிடிக்கப் போகிறேன்
பிடித்துப்போனதால்....!
களவு கொடுத்த
கவலையுடன்.....
தாமரையான்....! :)
3 comments:
hey nice da,...... superb feel....
oh... really thanks da :)
great da...kalaku......
Post a Comment