இளமைத் திருவிழா.........!
ஒருங்கிணைந்த செங்கல்களின்
பிரிவினையை
ஏற்படுத்திய மர ஜன்னல் ....!
உரையாடும்
அவன் கைகள்.......
என்றும் பார்க்காததாய்
ஏக்கமுடன்
உலகத்தை நோக்கிய ஒரு பார்வை......!
அதை அடைவேன்
இதை முடிப்பேன்
என
பல காலமாய் புலம்பும்
ஊமை இதயம்.......!
சுதந்திரமாய் வெளியில் கூட
வர முடியாமல்
ஜன்னல் கம்பியில் மாட்டிய
கைகள்......!
ஆனால் ஏதோ ஓர்
நம்பிக்கையில்
இன்று வரை
கனவை நனவாக்க துடிக்கும் நினைவுகள்.....!
கையில் கனவுகள்
மட்டும் முதலாய்.....
நெஞ்சில் நம்பிக்கை
மக்கிய உரமாய்......
தடைகளை உடைக்கும்
நாள்......
இளமையின் திரு நாள்.........!
காத்திருங்கள் தோழர்களே.......
காலம் கை கூடட்டும்.....!
--------------------------------------------------- தாமரையான் :)
1 comment:
great da...
Post a Comment