பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Tuesday, January 26, 2010


        அந்நியராக.....!

                                   

பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ 
என்று  கேட்கிறது ஐயரின் சத்தம்...
இங்கே இவளுக்கோ கண்களில் வெட்கம், 
கால்களில் நடுக்கம்......!
 
மனவாளனோ கம்பீரமாய் தன் வருங்கால 
மனைவியை  எதிர் நோக்கி 
ஆவலுடன் காத்திருக்க....
 
மணமகளோ கன்னங்களில் ரோஜாக்கள் பூக்க...
பாதங்களில் ஒரு வித தடுமாற்றத்துடன் 
பல கோடி கனவுகளுடன்  வந்தமர்ந்து 
அவனை விழி உயர்த்தி பார்க்கிறாள் ....
 
அவனோ ,
அவளது மிருதுவான விரல்களை 
அழுத்தி விடுகிறான் 
யாரும் பார்க்க வண்ணத்தில்.....!
அந்த அழுத்தத்தில் ஆயிரம் அர்த்தங்கள்
மின்னலென 
தாக்கி மறைந்தன .....!
 
இதில் ஏதும் கவனியாத ஐயரோ
கெட்டிமேளம் கெட்டிமேளம் 
என்று குரல் கொடுக்க.... 
மத்தளம் கொட்ட, நாதஸ்வரம் முழங்க...
தலைவி தன் தலை தாழ்த்தி தலைவனிடம் 
மாங்கல்யம் ஏற்று -அக்னியை 
வலம் வந்து  அனைவரையும் 
திரும்பி பார்க்கிறாள் அந்நியராக.....!
 
                                                      - இந்து !
 *--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

Thursday, January 21, 2010




விரலா இல்லை மோதிரமா?












என் இனிய தமிழ்த் தோழர்களே.......!



இன்றைய வாழ்வின் அவசரத்திலும் அலைக்கழிப்புகளிலும் நாம் நம்மையே மறந்து பல இடங்களில் கடிவாளம் கட்டிய குதிரை போலும், சுயநல  பொம்மை போலும் நடமாடிக் கொண்டிருக்கிறோம் என்பதில் நமக்கு சற்றும் ஐயமில்லை. இருந்தும் சில நேரங்களில் நாம் நம்மையே தூசி தட்டி உலகத்தினுடனான நம் பார்வையை உற்று நோக்குவது அவசியம்.


எடுத்துக்காட்டாக, உங்களின் விரல்களுக்கு ஒரு வைர மோதிரம் இலவசமாகத்  தருகிறேன், ஆனால் உங்கள் கையை வெட்டிவிடுவேன்... நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எவரேனும் உங்களிடம் கூறினால் உங்கள் விருப்பம்....... மோதிரமா அல்லது விரலா?


நன்கு படித்த, உலக அனுபவமுள்ள, ஆறாவது அறிவுடைய என் தமிழனே..... நீ மோதிரத்திற்க்காக விரலை இழக்கிறேன் என்றால் நான் என்ன செய்வேன்.........?


புரியவில்லையா.....


சரி.... உங்களுக்கு ஒரு அழகான வீடு இலவசமாய் தருகிறேன், ஆனால் அதில் நுழைவு வாயில்களே கிடையாது எனில் அதன் பயன் என்ன?


ஒவ்வொருமுறை நீங்கள் இலவசத்தை ஏற்கும் போதும் நீங்கள் உங்களையே மறைமுகமாக அடகு வைக்கிறீர்கள் என்று அர்த்தம்.....
சரி.... நான் சொல்ல வரும் செய்திக்கு  வருகிறேன்...


1000,2000 என அரசியல்வாதிகள் எவ்வளவு விலை கொடுப்பினும் உங்கள் ஓட்டுக்களை(உங்களை) விற்காதீர்கள்..... அது கண்ணை விற்றுவிட்டு ஓவியத்தை வாங்குவதற்கு சமம். 


ஒருவனும் உத்தமன் இல்லை தான்...... பொருளாதாரமும் மந்தம். ஆகவே எவன் பணம் (அன்பளிப்பு) கொடுப்பினும் தாங்கள் பவ்யமாய் பெற்றுக்கொண்டு உங்கள் ஓட்டுக்களை உங்கள் நன்மையையும், சமுதாயத்தின் நன்மையும் கருத்தில் கொண்டு தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு தாழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன்.


நிறைய பணம் வாயத்தவர்களும் பணம் (அன்பளிப்பு) பெற்றுக்கொண்டு அதை ஏழைகளுக்கு தானம் செய்து இலவசமாய் புண்ணியத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ளுமாறு இந்த ஆறாவது அறிவு சமூகத்திற்கு விண்ணப்பிக்கிறது மக்களே...........!


இறுதியாக மூன்று கேள்விகள்.....!


1. இந்த திடீர் சலுகைகள் (லஞ்சங்கள்) அவன் ஆட்சியில் இருக்கும் 5 ஆண்டுகள் வரை உதவுமா?
2. உங்களின் விலை வெறும் ஐந்நூருகளிலும் , ஆயிரங்களிலும்,   தானா?
3. உணவுக்கும்,உடமைக்கும்  உரிமையை விலை பேசலாமா?


உணருங்கள் உங்களையே.........!



இப்படிக்கு 
இலவச புண்ணியம் பெறப்போகும் 
ஜீவாத்மா.........! :)




Wednesday, January 20, 2010


இளமைத் திருவிழா.........!





ஒருங்கிணைந்த செங்கல்களின் 
பிரிவினையை 
ஏற்படுத்திய மர ஜன்னல் ....!


இயற்கைக்  காற்றுடன் 
உரையாடும் 
அவன் கைகள்.......


என்றும் பார்க்காததாய் 
ஏக்கமுடன் 
உலகத்தை நோக்கிய ஒரு பார்வை......!


அதை அடைவேன் 
இதை முடிப்பேன் 
என 
பல காலமாய் புலம்பும் 
ஊமை இதயம்.......!


சுதந்திரமாய் வெளியில் கூட
வர முடியாமல் 
ஜன்னல் கம்பியில் மாட்டிய
கைகள்......!


ஆனால்  ஏதோ ஓர் 
நம்பிக்கையில் 
இன்று வரை 
கனவை நனவாக்க துடிக்கும் நினைவுகள்.....!


கையில் கனவுகள் 
மட்டும் முதலாய்.....
நெஞ்சில் நம்பிக்கை 
மக்கிய உரமாய்......


தடைகளை உடைக்கும் 
நாள்......
இளமையின் திரு நாள்.........!
காத்திருங்கள் தோழர்களே.......
காலம் கை கூடட்டும்.....!


--------------------------------------------------- தாமரையான் :)






Saturday, January 9, 2010

சன்'மானம்'.....?




தினம் தினம் 
பொங்கும் 
உலைகள்....!

கண்ணீரை மறந்து 
காய்ந்த 
கண்கள்....!

உணவின் திடீர் வரவால்  
எட்டிப்பார்க்கும் 
வரி விழுந்த வயிறுகள்....!

நடப்பதர்க்குதான் நான் 
என்று 
உணர்ந்த கால்கள்......!

விழாக்காலங்களின் உணர்ச்சியை 
உணர்ந்த 
உள்ளங்கள்.....!

இறுதியாய் கூறியது 
அந்த 
ஏழையின் மனம்....!
"தெனம் இப்டி இடைதேர்தல் வந்தா எப்டி இருக்கும்....?"

--------------------------------------------------------------   தாமரையான் :)

Tuesday, January 5, 2010


            கண்ணீர் மழை ! 



மிகுந்த மகிழ்ச்சியில் 
இருந்தேனடி
என் அழகை நினைத்து................!


சூரியனும் என்னைத்தான் 
தினம் சந்திக்க 
வருவதாய் நினைத்தேன்........!


வெள்ளைப் புறாவும் 
என் நிறம் கண்டு 
மனம் நொந்ததாய் கேள்வி.....!


நிலவும் என் முதுகில் 
நீந்ததான் 
துடித்ததென்று நினைத்தேன்.....!


அத்தனை இன்பமும் 
அடிப்பெண்ணே உன்னை நான் 
காணும் வரை மட்டுமே.........!


வியந்தேன்.......
என் இனத்தவர் இறங்கி 
தரைக்கு 
வந்ததென்று .......!


பின்புணர்ந்தேன் அந்த
அழகின் 
பிரதிபலிப்பு நீயென்று.....!


சூரியனும் வெண்புறாவும் 
தேடி வந்தது 
எனக்காக அல்ல  உனக்கு 
என உணர்ந்தேன்......!


பின் செருக்கிழந்து
கார்மேகமாய் மாறி 
உன் காலடியை 
தேடிப் பொழிந்தேன்  
நான் மழையாய்..........!


மதிப்பு உனக்கு.....
மரணம் எனக்கு......!


----------------------------------- மேகம்!