பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Saturday, September 18, 2010

நட்புடைமை...!


தாய் மண்ணின்
தரை பிளந்து
இடியெனும்  தாளம்
தட்டினும்....

விண்வெளி
தன் வாய்பிளந்து
வெள்ளியாய்
உருக்கினும்....

பூமிதன் சதை கிழிந்து
பச்சைப்
புல் கருகினும்...

இனியில்லை இம்மண்ணில்
உழைப்பும்
பிழைப்பும் என்றேயாயினும்...

உள்ளங்கையிருக்கும்
பிடி உணவு தவிர
இம்மியளவும் இனி
இல்லை என்றாயினும்...

அழிவின் விளிம்பில் உயிர்
தத்தளிப்பினும்;
தன் கையில்
இருக்கும்
ஒரு பிடி உணவைக் கூட...

கொடுக்க மறுக்கும்
விரோதம்...
கொடுப்பதைத் தடுக்கும்
சமூகம்...
கெடுத்துக் கொடுக்கும் 
வஞ்சகம்...
கொடுத்துப் பின் எதிர்பார்க்கும் 
சொந்தம்...

ஆனால்...
பித்தம் கலந்த
இரத்தம்
தவிர்த்து...
மொத்தம் தர
சித்தம்
செய்யும் 
தூய்மையது -
கணக்கில் இரண்டு...!

ஒன்று...
வயிற்றில் உறைவிடம்
தந்து
பூமியில் வாழ்வை
வளம்பெற விதைப்பது.... தாய்மை...!

மற்றொன்று....
தாய்மை தந்த
வயிறு
மிகச் சிறிதென்றுரைத்து
அதைவிடப் பெரிதாம்
தன்
இதயத்தை இடமாக்கி
கொடுப்பது.... நட்பு...! 

டலில் உருவாகி...
யிரில் கருவாகி...
ர்ப்புப் பாராமல்
ம்மையில் தேயாமல்
னந்தத்தில் ஆர்ப்பரிக்கும்
ற்புதம்.... ''நட்பு"

அன்பைப்  பயிர் செய்து
அரவணைப்பை அறுவடை செய்யும்
ஒரேயொரு
வினோத விளைநிலம்.....!

வரியில்லை...
செலவில்லை...
நஷ்டமில்லை...
கஷ்டமில்லை...
இந்த உடமைக்கு...!
முதலீடு செய்து
முதலாளியாவோம்
நட்பெனும்  உடமைக்கு...!

 

நட்புடன்...
தாமரையான்...! :)