இ(தயம்)டம் மாற்றம்
மிதக்கவும் வீசவும்
காற்று
மறந்ததுபோல்
சிறந்த நிசப்தம்....!
வெள்ளை அறையில்
தேவதையாய்
நீ....!
வெண் பஞ்சின்
படுக்கையில்
சிவப்புக் குமிழ் போல்....
உன் பஞ்சுக்கையில்
குழந்தையாய்
என் இதயம்....!
தன்னை
ஏற்றுக்கொள்ளும் படி
மனுக்கைளை அடுக்க....
மெல்லிய புன்னகையுடன்
மௌனம்
கலைந்து சரி என்றாய் நீ...!
கெஞ்சிய
சிவப்பு ரத்தம்
பின்
சீராய் ஓடியது....!
ரத்தத்தின் சிவப்பில்
ஆனந்தக்
கண்ணீருடன் துடித்தது....!
சட்டென விழித்தேன்
கண்கள்
பிதுங்க....!
கனவென்று பின்
தெரிந்து
பதட்டத்தை போக்க
இடப்பக்கம் கை வெய்த்தால்....
துடிக்கும்
இதயம்
துரும்பளவும் இல்லை.....!
பின் அறிந்தேன்....
கண்டது கனவல்ல.....!
இதயக் கருவறையின்
இடமாற்றமென்று.....!
என்னவளே....
உன் அன்பு அரசாங்கத்தில்
களவுகளும்
கற்பனையில் தானோ.....!?
நடக்கட்டும் ராஜாங்கம்
எங்கள்
இதயக் கருவறையில்.....!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தாமரையான்! :)